பருவநிலை மாநாட்டில் இருந்து இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறிய ரிஷி சுனக்.
வைரலான வீடியோ காட்சி குறித்து வெளியான தகவல்கள்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சா்வதேச பருவநிலை மாநாட்டில் இருந்து இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
எகிப்தில் ஐ.நாவின் பருவநிலை மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.
இதில் பங்கேற்கவில்லை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முதலில் அறிவித்த நிலையில் பின்னர் தனது முடிவை மாற்றி கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பருவகால மாநாட்டு நிகழ்ச்சியில் திடீரென பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறினார். இதனால், என்ன, எதுவென தெரியாமல் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ரிஷி மேடையில் இருந்து கீழே இறங்கி செல்வதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறியுள்ளனர். ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர், ரிஷி சுனக்கின் காதில் ஏதோ முணுமுணுத்தபடி காணப்பட்டார்.
UK prime minister @RishiSunak has just been rushed out of the room by his aides during the middle of the launch for forests partnership at #COP27 pic.twitter.com/OQy9TYkqpX
— Leo Hickman (@LeoHickman) November 7, 2022
அதன்படி அங்கிருந்து வெளியேறலாமா என ரிஷி உதவியாளரிடம் விவாதித்தார் என பிரித்தானிய பத்திரிக்கையாளர் லியோ ஹிக்மேன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்து மேடையிலேயே சுனக் நின்றார். இதனை தொடர்ந்து மற்றொரு உதவியாளர் மேடைக்கு சென்று உடனே வெளியேறி செல்லும்படி சுனக்கை வற்புறுத்தி, அவரை அழைத்து சென்றார் என ஹிக்மேன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறியபோதும், அதற்கான தெளிவான காரணம் எதுவும் வெளிவரவில்லை.
இதனிடையில் Sun பத்திரிக்கையைன் எடிட்டர் ஹென்ஹி கோல் இது தொடர்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது பெரிய விடயம் அல்ல! தகவலின்படி ஜேர்மனியர்கள் மற்றும் தென்னாப்பிரியர்களை ரிஷி சந்திப்பதாக தாமதமாக முடிவு செய்யப்பட்டது, அதனால் தான் அவர் சென்றார் என தெரிவித்துள்ளார்.
About 2 mins before he left an aide came onto stage and was whispering in his ear for more than a minute…there was a discussion going on about, it seems, whether to leave at that moment. But Sunak stayed but another aide made decision to go back to him and urge him to leave pic.twitter.com/F2xSJc0sEw
— Leo Hickman (@LeoHickman) November 7, 2022