மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்திய விமானப்படையில் சேர ஒரு அற்புதமான வாய்ப்பு..!!

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அக்னிபாத் என்ற புதிய திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பின், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணியில் நீட்டிக்கப்படுவர். மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீர்வாயு ஆட்சேர்ப்பு பதவிக்கு இந்திய விமானப்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு நவம்பர் 7 முதல் 23 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வயது வரம்பு: 27 ஜீன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருட தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து முறை தேர்வு நடத்தப்படும் அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆவணச் சரிபார்ப்பு, தகுதித் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்றவை நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய விமானப்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனின் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்: 07.11.2022

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.11.2022

ஆன்லைன் தேர்வு நாள்: 18.01.2023 முதல் 24.02.2023 வரை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.