மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா டொனால்ட் டிரம்ப்? சூசகத் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வந்துள்ளன. 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், தனது ஆட்சியில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு யோசித்து செயல்பட்டவர்.

சர்வதேச அளவில், அமெரிக்காவுடனான வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது என அதுவரை இல்லாத பல முன்னெடுப்புத் திட்டங்களை மேற்கொண்டவர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. 

2020ஆம் ஆண்டு, அவரது பதவி முடிந்ததும், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைந்தார். தற்போது, 2022ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தயாராகிவிட்டதாக நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | Black Hole: சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

இந்த ஊகங்களை உறுதிப்படுத்தும் வகையில், நவம்பர் 15 ஆம் தேதி ‘மிகப் பெரிய அறிவிப்பை’ வெளியிடுவேன் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்ட டொனால்ட், டிரம்ப், மீண்டும் போட்டியிடத் தயாராகி வருவதாக சூசகமாக தெரிவித்தார்.  

நேற்று இரவு (நவம்பர் 7, 2022) ஒரு பிரச்சார பேரணியில் கலந்துக் கொண்ட, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 15 ஆம் தேதி புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் “மிகப் பெரிய அறிவிப்பை” வெளியிடப்போவதாக கூறினார். 

“மிக முக்கியமான தேர்தலை திசை திருப்புவதற்காக அல்ல… நவம்பர் 15, செவ்வாய்கிழமை புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் நான் மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன்,” என்று அவர் கூட்டத்தில் பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அதிக வட்டி தரும் வங்கிகள்! FD களுக்கு 7%க்கும் மேல் வட்டி தரும் இந்திய வங்கிகள்

செனட் பதவிக்கு போட்டியிடும் முதலீட்டாளரும், பிரபல எழுத்தாளருமான ஜேடி வான்ஸுக்காக டிரம்ப் பிரச்சாரம் செய்தார். வான்ஸ் தற்போது தனது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டிம் ரியானை வழிநடத்துகிறார்.

இடைத்தேர்தலுக்கு முன்னதாக டிரம்ப் கலந்துக் கொள்ளும் தேர்தல் பேரணிகளில், மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடத் தயாராகி வருவதாக அவர் சூசகமாக தெரிவித்து வருகிறார். அயோவாவில் பேசிய டிரம்ப், 2024 இல் “அநேகமாக அதை மீண்டும் செய்வேன்” என்று கூட்டத்தினரிடம் கூறினார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு, புளோரிடாவின் மியாமியில் செனட்டர் மார்கோ ரூபியோவுக்காக பிரச்சாரம் செய்த டிரம்ப், “நான் ஒருவேளை அதைச் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் காத்திருங்கள்” என்று தெரிவித்தார். 

தேர்தல் பேரணியில் பேசிய டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் மற்றும் அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் மற்றும் போதைப்பொருட்களை தடுக்க ஜனநாயகக் கட்சியினர் போதுமான அளவு செயல்படவில்லை என்பது பற்றியும் டிரம்ப் பேசினார். ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சி (January 6 Capitol riots) பேசிய டிரம்ப், “நான் செய்ததெல்லாம் அமைதியான மற்றும் தேசபக்தியுடன் உரை நிகழ்த்தியது மட்டுமே” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் இந்து சமூகத்தினரின் நிலை என்ன? இந்துக்களின் கலாச்சாரமும் உரிமைகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.