ரஷ்ய எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம் என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இன்று, தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை, அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:

இந்த ஆண்டில் இது, எங்களது ஐந்தாவது சந்திப்பு. ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்னைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, எங்களது சந்திப்பு இருக்கும். சர்வதேச நிலைமையை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இவற்றிற்கெல்லாம் மேலாக, உக்ரைன் – ரஷ்யா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளை தான் இப்போது பார்க்கிறோம். உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலை பொறுத்தவரை, பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற வற்றாத பிரச்னைகளும் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம். இதை இந்தியா தொடர்ந்து செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பர் 15..! – டொனால்டு ட்ரம்ப் சொல்லப் போகும் செய்தி என்ன?

பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் – ரஷ்யா இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இந்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கரும், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் இதுவரை ஐந்து முறை சந்தித்து பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.