ராணி கமிலாவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அங்கீகாரம்: அரண்மனை வெளியிட்டுள்ள புதிய சின்னம்


அரண்மனை குயின் கான்சார்ட்டின் தனித்துவமான புதிய மோனோகிராம் வெளியிட்டுள்ளது.

ரெஜினா என்பது லத்தீன் மொழியில் ராணியை குறிப்பதாகும்.

பிரித்தானியாவின் குயின் கான்சார்ட் கமிலாவின் புதிய அடையாள சின்னத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான தனித்துவமான சின்னங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

ராணி கமிலாவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அங்கீகாரம்: அரண்மனை வெளியிட்டுள்ள புதிய சின்னம் | Queen Consort Camilla New Monogram UnveiledCHRIS JACKSON/PA WIRE

அதே சமயம் பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து, அவரது மனைவி கமிலாவும் பிரித்தானியாவின் குயின் கான்சார்ட்டாக பட்டம் பெற்றார்.

இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை குயின் கான்சார்ட்டின் தனித்துவமான புதிய சைபரை (cypher or monogram) வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் இவான் கிளேட்டனால் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சின்னத்தில் கமிலாவின் ஆரம்ப எழுத்தான “சி” மற்றும் ரெஜினாவின் ஆரம்ப எழுத்தான “ஆர்” ஆகிய இரண்டு எழுத்துக்களையும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராணி கமிலாவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அங்கீகாரம்: அரண்மனை வெளியிட்டுள்ள புதிய சின்னம் | Queen Consort Camilla New Monogram UnveiledBUCKINGHAM PALACE

இந்த ரெஜினா என்பது லத்தீன் மொழியில் ராணியை குறிப்பதாகும்.
இந்த புதிய சின்னங்கள் குயின் கான்சார்ட் கமிலாவின் தனிப்பட்ட லெட்டர் ஹெட்கள், அட்டைகள் மற்றும் பரிசுகளில் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

மேலும் வியாழன் அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள நினைவுக் களத்தில் அவர் வைக்கும் குயின் கன்சோர்ட்டின் சிலுவையில் புதிய சின்னம் பயன்படுத்தப்படும் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ராணி கமிலாவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அங்கீகாரம்: அரண்மனை வெளியிட்டுள்ள புதிய சின்னம் | Queen Consort Camilla New Monogram UnveiledPA MEDIA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.