கராச்சி : பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை அதிகாரியாக பணிபுரிபவர் ஆமீர் கோபங்.
இவரது வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் ரூ.10 கோடி விழுந்து உள்ளது. இதுகுறித்து அவர் அறியவில்லை. திடீரென வங்கியில் இருந்து டெலிபோன் மூலம் வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆமீர் கோபங் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்.
கோபங் கூறியதாவது: இவ்வளவு பணம் எனக்கு கிடைத்தது அறிந்து அதிர்ச்சியுற்றேன். என் கணக்கில் இதுவரை சில ஆயிரங்களை தவிர வேறு எதனையும் நான் பார்த்தது இல்லை என்றார்.
அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதும், கோபங் ஏதேனும் செயல்படும் முன் அவரது கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கியது.
ஏ.டி.எம். அட்டையையும் பணம் எடுக்க முடியாதபடிக்கு முடக்கியது. வங்கி கணக்கில் எப்படி, எங்கிருந்து பணம் வந்தது என விசாரணை துவங்கியுள்ளது.
பாகிஸ்தானின் லர்கானா மற்றும் சுக்கூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. லர்கானாவில் 3 காவல் அதிகாரிகளின் வங்கி கணக்குகளிலும், சுக்கூரில் ஒரு காவல் அதிகாரியின் வங்கி கணக்கிலும் ரூ.5 கோடி பணம் விழுந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement