அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள், பொட்டாசியம் போன்ற பல ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது.
இவை உடலுக்கு பல்வேறு வகையில் நன்மையை தருகின்றது.
இருப்பினும் இதனை தினமும் அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தையே தரும்
அந்தவகையில் வாழைப்பழத்தினை தினமும் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளும்போது நம்முடைய உடல் எடை அதிகரிக்கச் செய்யும்.
- வாழைப்பழத்தில் சர்க்கரை சத்து அதிகம். இதிலுள்ள அதிகப்படியான ப்ரக்டோஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக இதனை காலை நேரத்தில் எடுத்து கொள்ள கூடாது.
- வாழைப்பழத்தினை தினமும் எடுத்துக் கொள்ளும்போது அது மலச்சிக்கலை ஏற்படுத்த காரணமாக இருக்கிறது. மேலும் இதனை அதிகமாக அளவிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே இதனை மிதமான அளவில் சாப்பிடுங்கள்
- அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை ஏற்படும். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள தையமின் ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தும்.