விஜய் பரபரப்பு உத்தரவு; ஃபீல்டுக்கு வந்தது மக்கள் இயக்கம்!

நடிகர் விஜய் தற்போது வாரிசு என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கல் பண்டிகை நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியாகும் அதே நாளில் அஜித் நடிக்கும் துணிவு படமும் ரிலீஸ் ஆகிறது. இதனால் இருதரப்பு ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் போட்டியை சமாளிக்க இரு தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு, விஜய் சென்னை திரும்பி உள்ள நிலையில் திடீரென தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இக்கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து முதலில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரும் நிலையில் போட்டியை சமாளித்து வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் பேசியதாவது:

விஜய் ரசிகர்கள் அனைவரும் முதலில் அவரவர் தங்களது குடும்பத்தை நன்கு கவனிக்க வேண்டும். இதை தொடர்ந்து வருவாய் ஈட்டும் ஏதேனும் பணியை கவனிக்க வேண்டும்.

இதன் பிறகு தான் விஜய் மக்கள் இயக்கத்தின் சேவை பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு, கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றனர். தற்போது நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என, அவ்வப்போது பரபரப்பு தகவல் பரவுவது வாடிக்கையாக உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் திடீரென விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை வரவழைத்து புதிய உத்தரவுகளை தெறிக்க விட்டுள்ளது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.