கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரிவர படிக்காமல் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளான். மாணவனின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாணவனுக்கு மனநல ஆலோசனை வழங்கினர். அப்போது, டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவன் தெரிவித்தது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த தகவலை அறிந்த மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் 34 வயதான டியூசன் டீச்சரை கைது செய்தனர். மாணவன் கொரோனா காலத்தில் அதேபகுதியை சேர்ந்த 34 வயதான பெண்ணின் வீட்டிற்கு டியூசன் படிக்க சென்றுள்ளான்.
ஜிம் பயிற்சியாளராக இருந்த அந்த பெண் கொரோனா காலத்தில் வீட்டில் டியூசன் நடத்தி வந்துள்ளார். அந்த பெண் தனது கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் டியூசன் படிக்க வந்த 16 வயது பள்ளி மாணவனுக்கு டீச்சர் மது கொடுத்துள்ளார். பின்னர் மயக்க நிலைக்கு சென்ற அந்த மாணவனை டியூசன் டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
டியூசனுக்கு சென்ற அந்த மாணவனுக்கு மதுகொடுத்து டீச்சர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட டியூசன் டீச்சர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. கொரோனா காலத்தில் டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in