16 வயது மாணவனுக்கு மது.. பல முறை பலாத்காரம்: 34 வயது டியூசன் டீச்சர் கைது..!

டியூசன் படிக்க வந்த 16 வயது பள்ளி மாணவனுக்கு மதுபானம் கொடுத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்த 34 வயது டியூசன் டீச்சரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இதனிடையே, மாணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவன் சரிவர படிக்காமல் மனரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளான். இதனால் கவலையடைந்த மாணவனின் பெற்றோர், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த மாணவனை அழைத்து ஆசிரியைகள் விசாரித்தனர். பின்னர், அந்த மாணவனுக்கு மனநல ஆலோசனை வழங்கினர். அப்போது அந்த மாணவன், டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மனநல ஆலோசகரிடம் தெரிவித்துள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள், இதுகுறித்து மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 34 வயதான டியூசன் டீச்சரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், திரிச்சூரை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் கொரோனா காலத்தில் அதேபகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண்ணின் வீட்டிற்கு டியூசன் படிக்கச் சென்றுள்ளார்.

ஜிம் பயிற்சியாளராக இருந்த அந்தப் பெண் அந்த வேலையை விட்டு விலகி கொரோனா காலத்தில் வீட்டில் டியூசன் வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். அந்த பெண் தனது கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் தனது வீட்டிற்கு டியூசன் படிக்க வந்த அந்த 16 வயது மாணவனுக்கு டீச்சர் மது கொடுத்துள்ளார். மது குடித்ததில் மயக்க நிலைக்குச் சென்ற அந்த மாணவனை டியூசன் டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

டியூசனுக்கு சென்ற அந்த மாணவனுக்கு மது கொடுத்து டீச்சர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கொரோனா காலத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். டியூசன் டீச்சர் கடந்த 28-ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.