"OBC பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பை ஏன் நடத்த கூடாது?" – மத்திய அரசுக்கு கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இதனை தொடர்ந்து,  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள் என நீதிபதிகள் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும்  1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவு மக்களின் நலனுக்காக கொள்கை ரீதியான முடிவை மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கோரிய வழக்கில், அந்த வழக்கு குறித்து மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை மேலக்காலை சேர்ந்த தவமணி தேவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
image
அதில், “2001 ஆம் ஆண்டிலேயே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சமூக நீதி அமைச்சகமும் OBC அடிப்படையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தது. ஆனால், அது போல கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. OBC அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும் போதே, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க ஏதுவாக இருக்கும்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக் கோரி, அகில இந்திய OBC ஒருங்கிணைப்புக் குழு மனு அளித்த நிலையில், எவ்வித பதிலும் தற்போது வரை அளிக்கப்படவில்லை. பின்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்துவது குறித்த அகில இந்திய OBC ஒருங்கிணைப்புக் குழுவின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.  மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் ” என கூறியிருந்தார்.
image
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  மத்திய அரசுத்தரப்பில், ’இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு என தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரபட்டது’ என கூறப்பட்டது. 
இதனையடுத்து நீதிபதிகள், ‘ மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள். 1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவு மக்களின் நலனுக்காக கொள்கை ரீதியான முடிவு மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே’ என கருத்து தெரிவித்தனர்.
வழக்கு குறித்து மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படியுங்கள் – “எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் பொம்மை போல் உள்ளார்” – அமைச்சர் சேகர்பாபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.