அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 26,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற 26,000 பேரை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கயில்  இவ்வாறு  அமைச்சர் குறிப்பிட்டார். 

 

இதற்காக 2018, 2019, 2020, 2021 காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள், நாடளாவிய ரீதியாக நடைபெறவுள்ள பொதுப் போட்டிப்பரீட்சையின் மூலமாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர்.

 

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் நிதியுதவியூடாக, பாடசாலைகளில் பௌதீக வளங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இணங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் சுட்டிக்காட்டினார்.

M M Fathima Nasriya/AKM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.