குஜராத் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான விஜய் ரூபானி அறிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் புதிய கட்சி தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “அனைவருடைய ஒத்துழைப்போடு 5 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றினேன். இந்த தேர்தலில் புதிய தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மூத்தவர்களுக்கு கடிதம் அனுப்பி டெல்லிக்கு தெரிவித்தேன். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் வெற்றி பெறுகிறார்” என்று ரூபானி கூறினார்.
ரூபானியைத் தவிர, குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும், பாஜக மூத்த தலைவர் பாஜக எம்எல்ஏ பூபேந்திரசிங் சுதாசமாவும் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்.
“மற்ற தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் இதுவரை ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். கட்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சுதாசமா கூறினார். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்த மற்றொரு பாஜக தலைவர் பிரதீப்சிங் ஜடேஜா, வாட்வா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்த பாஜக தலைவர்கள்:
விஜய் ரூபானி
நிதின் படேல்
சவுரப் படேல்
பூபேந்திரசிங் சுடாசமா
பிரதீப்சிங் ஜடேஜா
ஆர்சி ஃபால்டு
விபவ்ரி டேவ்
வல்லப காக்டியா
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குஜராத் தேர்தலில் பாஜக 99 இடங்களையும், அதன் முக்கிய போட்டியாளரான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.