சென்னை: குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பணியாளர் சங்கங்களின் கருத்துக்களை கேட்ட பின்பே குறுகிய கால பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை குறித்தது முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.