மும்பை: மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சஞ்சய் ராவத், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சஞ்சய் ராவத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement