சாதித்த இந்தியர்! $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த Zoho!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஒரு பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்தியா நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது. சென்னை ஐஐடியில் கல்லூரி படிப்பை நிறைவு செய்த பின்னர் அமெரிக்காவில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். தொடக்க காலத்தில் அமெரிக்காவில் பணி புரிந்த ஸ்ரீதர் வேம்பு, பின்னர் நாட்டிற்கு ஏதேவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்னை திரும்பி வந்து அட்வன்ட் நெட் என்ற நிறுவனத்தினை தொடங்கினார். இது தற்போது Zoho நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் சாப்ட்வேரினை விநியோகித்து வருகின்றது. தற்போது உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை இருக்கும் நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வருவாய் அளவினை எட்டியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களான ஸ்ட்ரைப், ட்விட்டர், பேஸ்புக், லிஃப்ட், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. ஆனால் இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho அடுத்த ஒரு வருடத்தில் 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. 

பயனர்களுக்கு அதிவேக நெட்வொர்க்குகளை வழங்க அடுத்த 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் சுமார்100 நெட்வொர்க் PoPகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஜோஹோ நிறுவனம் கூறியுள்ளது. பிளாக்செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் Zoho நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ ஆண்டுதோறும் உலகளாவிய வருவாயில் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என்றாலும், 2022 ஆம் ஆண்டில் வளர்ச்சி குறையும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். “எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்ஃபோலியோ மற்றும் வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் சேமித்த பணம் இதுவரை எங்களுக்கு உதவியுள்ளது. மிகவும் மலிவு விலையில் மிக உயர்ந்த தரமான சலுகைகளை வழங்குவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என்று நம்புகிறோம்,” என்று வேம்பு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.