சிறு, குறு நிறுவனங்களுக்கு 10% மின் கட்டணம் குறைப்பு


சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25% யிலிருந்து 15% சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த செப்.,10ம் தேதி முதல் நடை முறைப்படுத்தப்பட்டது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், மிண்கட்டணத்தை குறைக்கும் படி, பல்வேறு சிறு, குறு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

latest tamil news

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று, குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25% யிலிருந்து 15% சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.