திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள வானவில் நகரில் வசித்து வரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரது மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பருவநிலை விருது என்பது உலக அளவில் சுற்றுப்புற சூழ்நிலையின் மீது அக்கறை கொண்ட பள்ளி மாணவர்களுக்கான ஒரு சர்வதேச பருவநிலை நிகழ்ச்சி, இவ்விருது சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தில் புதுமைகளை கொண்டு வர நினைக்கும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் ஒரு விருதாகும். சுற்றுச்சூழல் பருவநிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக சிறந்த நடவடிக்கை எடுத்த 12 முதல் 17 வயது உடைய பள்ளி மாணவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்காலத்தலைமுறையினர் சொல்லும் புதிய தீர்வுகளை கண்டெடுக்க இவ்விருது 2016 ல் துவங்கப்பட்டது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்ட நடுவர் குழு கடந்த 2020 ஆண்டு விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுத்தது, இவ்விருது பெறும் மாணவருக்கு டிப்ளமோ சான்றிதழ் பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது, இவ்விருது வழங்கும் விழா ஸ்டாக்ஹோமில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெற்றது, இந்த சிட்டி ஹாலில் தான் உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு விழாவும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை எஸ்கேபி சர்வதேச பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் வினிஷா உமாசங்கர் உருவாகியுள்ள சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரி வண்டி சுத்தமான காற்று விருது பிரிவில் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் பருவநிலை விருதினை வென்றார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய ஒளியை பயன்படுத்துவது இக்கண்டுபிடிப்பின் முக்கியமானதாகும். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். எரிக்கப்பட்ட கறியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம் நீர் மற்றும் காற்று மாசுபடுவது தடுக்கப்படும் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு மரம் தினமும் 5 நபர்களுக்கான ஆக்ஸிஜனைத் தருகிறது, மரங்கள் வெட்டப்படுவதால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைகிறது, ஆதலால் மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம் காற்று மாசுபடுவதை தடுப்போம் பருவநிலை மாற்றத்தை தடுப்போம் என்கிற வகையில் மாணவி வினிஷா இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.