META தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமை காலை முதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டதை உறுதி செய்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் செவ்வாயன்று நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஒரு நாள் கழித்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றி தாய் நிறுவனமான மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் பெருமளவிலான பணி நீக்க நடவடிக்கைக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், தனது தவறான எண்ணங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த அதிகப்படியான நம்பிக்கை காரணமாக, மெட்டாவில் அதிக அளவில் ஊழியர்களை பனியில் அமர்த்தியதாக அவர் குறிப்பிட்டார். பணி நீக்கங்களை எதிர்கொள்பவர்களில் ஆட்சேர்ப்பு மற்றும் வணிகக் குழுக்கள் இருப்பதாக ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டார்.
இன்று காலையில் அனுப்பப்படும் நிறுவன அளவிலான மின்னஞ்சலில் பணிநீக்கங்கள் குறித்து மெட்டா ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நான்கு மாத சம்பளம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது… தகவல் அளித்த எலான் மஸ்க்!
மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்ததாலும், பங்குகளின் மதிப்பு 70 சதவிகிதம் வீழ்ச்சி காணப்பட்டதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 நிலவரப்படி Meta நிறுவனத்தில் 87,000 பணியாளர்கள் இருந்தனர். இன்றைய நிலவரப்படி 10 சதவீத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு, மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர், அதன் மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு மெட்டாவில் பணி நீக்கங்கள் குறித்து செய்திகள் வெளியாகின்றன. சமூக ஊடக நிறுவனத்திற்கு பெரும் இழப்புகளை மேற்கோள் காட்டி மஸ்க், வேறு வழியில்லாமல் எடுக்கப்பட்ட முடிவு என குறிப்பிட்டார்.
செப்டம்பரில், தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டா செலவைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதுள்ள அணிகளில் மாற்றங்களைச் செய்ய நினைத்ததாகவும் ஊழியர்களிடம் தெரிவித்தார். கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடக நிறுவனத்தால் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஜுக்கர்பெர்க் ஒரு அறிக்கையில், “சமீபத்தில் எங்கள் வருவாய் முதல் முறையாக சற்று குறைந்துள்ளது. எனவே நாம் சரிசெய்ய வேண்டும்” என்றார். 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து Meta தனது முதல் பட்ஜெட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்னதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபரில் பல பிரிவுகளில் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் படிக்க | சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!
மேலும் படிக்க | அமைதி பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் காட்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ