டெஸ்லாவின், மேலும் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார்.
டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க் தனது மிகப்பெரிய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை ஏற்கனவே 15.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்திருந்தார்.
தற்போது மேலும் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான 19 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது அவர் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
டுவிட்டரிலிருந்து 50 சதவீதம் ஊழியர்களை வெளியேற்றியதற்கு இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜேக் டோர்ஸி (Jack Dorsey) வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், சமூக வலைப்பின்னலில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மஸ்க்கை வலியுறுத்தியுள்ளார்.