தீவிரவாதிகளின் உடற்பசிக்கு இரையாகும் பெண்கள்?..தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை.!

இந்தி பட இயக்குநரான சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்துள்ள, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் கடந்த நவ.3ம் தேதி வெளியானது. சுமார் 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில், ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தன் கதையை பகிர்கிறார். கேரளாவில் எப்படி பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை ஹிஜாப் அணிந்த பெண் கூறுகிறார். கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர். அந்த 32000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்த டீசரில் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சர்ச்சைகள் வெடித்தது. ‘நாடு முழுவதும் உள்ள ஹிந்துப் பெண்களுக்கு எச்சரிக்கை .!! கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! 32,000 இளம் பெண்கள் இஸ்லாமுக்கு லவ் ஜிகாத்தால் மதம் மாறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உடற்பசிக்கு இரையான பரிதாபம்! தயவுசெய்து பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!’ என்றவாறு செய்திகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது.

அதைத் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி, வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக பலரும் குற்றம் சாட்டினர். கேரளாவை பயங்கரவாதிகளின் இருப்பிடம் போல் சித்தரித்துள்ளதன் காரணமாக படத்தின் இயக்குனர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய, திருவனந்தபுரம் கமிஷனருக்கு கேரள டிஜிபி உத்தரவிட்டார். இந்தநிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான விடி சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் அந்த டீசரை பார்த்திருந்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனை தடை செய்ய வேண்டும். திரைப்படங்களுக்கு தடை விதிப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள். ஆனால், இது சமூகங்களுக்கு இடையே சிக்கலை உருவாக்கும். அதனால், இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும்.

ஐஎஸ் அமைப்புக்கு கேரளாவில் ஆள் சேர்க்கை நடைபெறுவதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ளது போல, எந்தவொரு வழக்கோ அல்லது பதிவோ மாநில போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. மத்திய புலனாய்வு பிரிவினர் வசம் இது குறித்த தகவல் இருந்தால், அதை பொது பார்வைக்கு கொண்டு வரலாம்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.