பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம்
தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த
மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த
, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி பாஜக மேலிடமும் மவுனம் காத்து வருகிறது. அதிமுக மீண்டும் இரண்டு அணிகளாக பிளவுபட்டு உள்ளதால், அடிமட்டத் தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகைத் தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கும் பட்சத்தில், டெல்லியின் ஆசி தனக்கு இருப்பதை காட்ட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன், ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளது,
அணியை கலக்கம் அடையச் செய்துள்ளது.