நடுக்கடலில் தவித்த புலம்பெயர்ந்தோரை கைவிட்ட இத்தாலி: பிரான்ஸ் நோக்கி திரும்பியுள்ள படகு


200க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோருடன் நடுக்கடலில் சிக்கித் தவித்த படகு ஒன்று பிரான்ஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து அது பிரான்ஸ் நோக்கிப் பயணிக்கிறது.

200க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோருடன் நடுக்கடலில் படகு ஒன்று சிக்கித் தவித்த நிலையில், இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இத்தாலியின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள Giorgia Meloni அந்தப் படகை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஆகவே, அந்த படகு நேற்று பிரான்ஸ் நோக்கிப் புறப்பட்டது.

இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்வது குறித்து மவுனம் சாதித்த நிலையில், பிரெஞ்சு தொண்டு நிறுவனமான SOS Mediterranee, பிரான்ஸ் கடற்படை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது.

நடுக்கடலில் தவித்த புலம்பெயர்ந்தோரை கைவிட்ட இத்தாலி: பிரான்ஸ் நோக்கி திரும்பியுள்ள படகு | Italy Abandons Stranded Migrants In Mediterranean

அந்த படகு பிரெஞ்சுத் தீவான Corsica பகுதியிலுள்ள கடல் பரப்பை வியாழனன்று சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ் தரப்பில் என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அந்த படகிலுள்ள புலம்பெயர்வோரில் பலர், 18 நாட்களாக கடலிலேயே இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.