பிரபலமான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில், வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ‘Breathe Into the Shadows’. இந்த வெப் சீரிஸில் அமித் சாத், சயாமி கெர், நித்யா மேனன் மற்றும் நவீன் கஸ்தூரியா போன்றோர் நடித்துள்னனர்.
இதனை அபுன்டான்டியா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரலில் அமைந்த இத்தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிஷேக் பச்சனிடம் கதாப்பாத்திரத் தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” நான் இப்போது எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் என்னால் முடிந்ததை விட, அதில் அதிக கவனம் செலுத்துகிறேன். நான் சினிமாவில் கால்பதித்த ஆரம்ப கட்டத்தில் ‘ஷாருக்கான் ஜி’ இந்த கருத்தை மிகத் துல்லியமாக எனக்கு விளக்கினார். ஒரு நாள் நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது, நான் அவரிடம் கதாப்பாத்திர தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பினேன்.
அப்போது அவர், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் குறித்து, உங்களை நீங்களே கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள், நீங்கள் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள்? எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டாம், உங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் எனக்கு அறிவுறுத்தினார். அன்றிலிருந்து நான் அதைதான் கடைப்பிடிக்கிறேன் என்று அபிஷேக் பச்சன், ஷாருக்கானின் அறிவுரையை நினைவுக் கூர்ந்திருக்கிறார்.