நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டில் இன்று (09) அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நேபாள டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று (08) காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.