புதிய நண்டு இனம் கண்டுபிடிப்பு அண்ணாமலை பல்கலை சாதனை| Dinamalar

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில், புதிய வகை நண்டு கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், தைவான் தேசிய சுங்சிங் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சின் மாண்டிப்பில்லா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து உயிரினங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், இரண்டு புதிய நண்டு வகைகளை கண்டறியப்பட்டு பெயர் சூட்டப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயராய்வு மையத்தின் எதிரே உள்ள கடலோர சதுப்புவனத்தில் புதிய வகை நண்டை தற்போது கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய வகை நண்டிற்கு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டிற்கு மேலான கல்வி மற்றும் ஆய்வு சேவையை நினைவூட்டும் வகையில், “சூடோஹெலிஸ் அண்ணாமலை” என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயராய்வு மைய ஆய்வு மாணவி பிரேமா மற்றும் இந்த மையத்தின் இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், தைவான் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் ஹெசிசின் ஆகியோரின் கூட்டு முயற்சியாக உலக விலங்கின எண்ணிக்கையில் மற்றொரு இனமாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு கட்டுரையை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டு, பிற இன நண்டுகளில் இருந்து மூலக்கூறு ஆய்விலும், உருவவியல் ஆய்விலும் வேறுபட்டுள்ளது என ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு கட்டுரையை விலங்கியல் படிப்பு என்ற உலக பிரசித்திப் பெற்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.