பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதியில் களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
இந்நிலையில் லிஸ் ட்ரஸ் தலைமையில் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பெரிய நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டு இருந்ததால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு வந்தது.
அதிபயங்கர ஆபரேஷனில் பாஜக; கருகும் இலை; மவுசு கூடும் குக்கர்!
இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பிரிட்டனை மீட்கும் பொறுப்பு பிரதமராக பொறுப்பெற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு உள்ளது. இதற்காக விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் குறைந்த வருமானம் பெறும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கை செலவு நெருக்கடியை சமாளிப்பதற்காக பிரிட்டன் அரசு ரூ.32 ஆயிரம் நிதியுதவி வழங்க இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பரபரப்பு அரசாணை; தூக்கம் தொலைத்த அரசு ஊழியர்கள்!
வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை இந்த உதவித்தொகையை தாங்களாகவே முன் வந்து மக்களின் வங்கிக்கணக்குகளில் சேர்ப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மக்கள் தங்களுடைய வங்கிக்கணக்கு எண் மற்றும் ஏடிஎம் பின்களை யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.