மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே ஆகிய காங்., கூட்டணி கட்சியின் தலைவர்கள் வரும் நவ., 11ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கின்றனர்.
கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் பாதயாத்திரை கடந்த அக்., 23-ம் தேதி கர்நாடகாவில் இருந்து தெலுங்கானாவில் நுழைந்தது. தீபாவளி பண்டிகையொட்டி, யாத்திரை 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பின், தொடச்சியாக கடந்த அக்.,27ம் தேதி மீண்டும் பாதயாத்திரை துவங்கியது.
இந்நிலையில், காங்., எம்.பி ராகுல் ஒற்றுமை பயணம், தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள், 7 பார்லி., தொகுதிகள் என கடந்து வந்த அவர் நவ., 7ம் தேதி மஹாராஷ்டிரா எல்லைக்கு வந்ததடைந்தார். இதையடுத்து நான்டர் மாவட்டம் வந்த ராகுலை மாநில காங். நிர்வாகி அசோக் சாவன் உள்ளிட்டடோர் வரவேற்றனர்.
தொடர்ச்சியாக காங்., எம்.பி ராகுல், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் இருந்து இன்று(நவ.,08)) பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கினார். அப்போது, மஹாராஷ்டிரா கா.ங்., தலைவர் அசோக் சவான் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கா.ங்., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு:
இதையடுத்து, காங்., தலைவர் அசோக் சவான் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே ஆகிய காங்., கூட்டணி கட்சியின் தலைவர்கள் வரும் நவ., 11ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்வார்கள்.
இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை(நவ.,10) பங்கேற்கின்றனர். இதேபோன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே மற்றும் ஜிதேந்திரா ஆவாத் ஆகியோர் பாதயாத்திரையில் நாளை கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.
சிறு, குறு தொழில்கள் பாதிப்பு:
காங்., எம்.பி ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி தவறான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதால் , சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், சிறு, குறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, வெறுப்பு அரசியல் குறித்து மீண்டும் மத்திய அரசு குறித்து குற்றம் சாட்டினார். பணம் மதிப்பு இழப்பால், கருப்பு பணம் ஒழியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்