வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வங்கக்கடலில் இன்று(நவ.,09) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் 7.6 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெறும்.
இதையடுத்து வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வுபகுதியால் வரும் 11ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement