வேலூர்: வேலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியான சிஎம்.சி. மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில், முதலாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்த வீடியோ வைரலான நிலையில் இதையடுத்து, ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுகுறித்து புகார் வரவில்லை என மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் கைவிரித்துள்ளனர்.
பள்ளிகள், கல்லூரிகளில் ராகிங் சட்டப்படி தடை செய்யப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றால் ராகிங் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஒவ்வாரு கல்லூரியிலும் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதில் ராகி செவ்து தண்டனைக் குரிய குற்றமாகும். மீறினால் மாணவர்களின் இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உலக புகழ் பெற்றது, இங்கு முதலாண்டு மருத்துவம் படிக்க சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முதலாண்டு மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு புகார் அனுப்பியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கவுன்சிலிங் முடிந்து, முதலாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சிஎம்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை, சீனியர் மாணவர்கள் சிலர் சேர்ந்து, அவர்களின் உடைகளை களைந்து, உள்ளாடைகளுன் விடுதியை சுற்றி வரச்செய்துள்ளனர். அப்போது அவர்கள்மீது தண்ணீரை பிய்ச்சி அடித்துமேலும் துன்புறுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முதலாமாண்டு மணாவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர சீனியர் மாணவர்கள் மிரட்டியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் ராகிக் கமிட்டிக்கு மாணவர்களிடம் இருந்து மொட்டை புகார் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த கடித்ததில், ”மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும், இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையில், விடுதி வார்டன் உட்பட மேலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “இதெல்லாம் கேம்பஸ்ஸில் பகலில் நடந்தது. எல்லோரும் பார்க்கும்படி இருந்தது. ஊழியர்கள் யாரும் எங்களைக் காப்பாற்ற வரவில்லை,” என்று மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்கள் டிவிட்டரில் இதை பதிவிட்டு, பிரதமர் அலுவலகம், முதலமைச்சரின் அலுவலகம், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் பிற ஏஜென்சிகளுக்கும் டேக் செய்துள்ளனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, CMC முதல்வர் டாக்டர் சாலமன், ஏழு மூத்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளிக்கவோ, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கவோ இல்லை. விசாரணையை முடித்த பின்னரே காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை ஈடுபடுத்துவோம் என்று கல்லூரி கூறியது.
பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றால் ராகிங் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறினால் மாணவர்களின் இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் ஏற்படலாம்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், ‘இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்ததும் நடவடிக்கை எடுப்போம், என்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கூறியதாவது: சி.எம்.சி.,யில் ராகிங் நடந்ததாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் எதுவும் வரவில்லை. “கல்லூரியில் மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. அதை விசாரித்து வருகிறோம். ராகிங் குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று குமரவேல் பாண்டியன் கூறினார்.
டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவுக்கும் புகார் வந்துள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். “செல்லில் இருந்து வந்த தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, CMC அவர்கள் இந்த விஷயத்தை கவனித்து வருவதாக பதிலளித்தார். கல்லூரி எங்களுக்கு விரிவான அறிக்கையை வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.