பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உறுதி செய்து. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வெளியாகி வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றுள்ளன. தமிழகத்தி திமுக மற்றும் அதன் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்குக் கல்வி, மற்ற வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருப்பதை இந்திய ஜனநாயகக்கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாரிவேந்த எம்.பி தெரிவித்துள்ளதாவது, “பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சி தொடங்கிய நாளிலிருந்து இந்திய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்பதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பினை இந்திய ஜனநாயகக் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM