நவம்பர் 6ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (TET-2022) கலந்து கொண்ட ஒரு விண்ணப்பதாரரின் தேர்வு ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகை சன்னி லியோனின் புகைப்படம் அச்சிடப்பட்ட ஹால் டிக்கெட் வைரலானதை அடுத்து, சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்தில் பங்குபெற ஆயிரணக்கானோர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் ருத்ரப்பா கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில், பெண் ஒருவரின் ஹால் டிக்கெட்டில், அவரது புகைப்படம் இருக்கும் இடத்தில் சன்னிலியோன் புகைப்படம் இருந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தவுடன், விசாரணையில், இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுவது, ‘’ ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை அப்ளே செய்து சமர்ப்பிக்கும் போது புகைப்படத்தைப் பதிவேற்றும் நேரத்தில் தான் இந்த முட்டாள்தனம் ஏற்பட்டிருக்கும். அப்பெண்ணின் விண்ணப்பத்தை அவர் ஆன்லைனில் பூர்த்தி செய்துவில்லை. அவருக்கு பதிலாக கணவரின் நண்பர் ஒருவர் தவறுலாக மாற்றி பதிவு செய்துள்ளனர் “ என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எந்த புகைப்படம் பதிவு செய்தாலும் அதை ஆய்வு செய்யாமல் அவ்வாறே வெளியிடும் மோசமான நிலையில் கல்வித்துறையின் உட்கட்டமைப்பு இருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித் துறை தரப்பில் , ‘ விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய, அவர்களுக்கு என பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும், இது வேட்பாளருக்கு பிரத்யேகமானது மற்றும் வேறு யாரும் அதில் தலையிட முடியாது. தேர்வர்கள் தான் தேர்வுக்கான விண்ணப்பத்தை அப்ளே செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை விசாரித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் – 1921 முதல் 2022 வரை.. இட ஒதுக்கீடு போராட்டம் கடந்து வந்த பாதை ! – தமிழகமும், இந்தியாவும்!!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM