அரையிறுதி போட்டியில் யாரை களமிறக்குவது தினேஷ் கார்த்திக்? ரிஷப் பண்ட்? – ஏபி டிவில்லியர்ஸ் பதில்

அடிலெய்டு,

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அடிலெய்டு ஓவர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இதனிடையே, இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படுவாரா? அல்லது ரிஷப் பண்ட் களமிறக்கப்படுவாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்குவதா? ரிஷப் பண்ட்டை களமிறங்குவதா என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏபி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், கடினமான ஒன்று தான், தினேஷ் கார்த்திக் கட்டாயம் அணியில் இடம்பெறவேண்டும் அதில் சந்தேகமே இல்லை.

அரையிறுதி சுற்று அவர் மிகவும் அனுபவம் மிக்கவர். தினேஷ் கார்த்திக் களமிறங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால், இங்கு வளைவான பந்து வீசப்படும்போது ரிஷப் பண்ட்டும் அணியில் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவருக்கு அணியில் இடத்தை நான் கண்டுபிடிப்பேன். அவருக்காக யார் இடத்தை விட்டுக்கொடுப்பார் என்று எனக்கு தெரியவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா மற்றும் ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். ரிஷப் பண்ட்டிற்கு தீபக் ஹூடா வழிவிடலாம்.

ரிஷப் பண்ட் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். எந்த பந்து வீச்சையும் சமாளித்து போட்டியை தங்கள் பக்கம் கொண்டு செல்லும் நம்பிக்கை பண்ட்டிடம் உள்ளது. ரிஷப் பண்ட் வேகப்பந்து, சுழற்பந்தையும் எதிர்கொள்வார். ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என 2 பேருக்கும் அணியில் இடம் கொடுப்பேன். உங்களுக்கு தினேஷ் கார்த்திக்கின் அனுபவமும் வேண்டும், ரிஷப் பண்ட்டின் வெற்றிபெறும் திறனும் வேண்டும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.