ராஜ குடும்பப் பெண்களைப் பொருத்தவரை, ஊடகங்களில் அதிக அளவில் இடம்பெறும் செய்திகள் பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட், மற்றும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஆகியோரைக் குறித்தவையாகத்தான் இருக்கும்.
ஆனால், மக்கள் மீது அதிக தாக்கத்தை உண்டுபண்ணும் ராஜ குடும்பப் பெண்கள் என்று பார்த்தால், அந்தப் பட்டியலில் முதலிடத்தில் அவர்கள் இருவருமே இல்லை.
எப்போதுமே முதலிடம் இவருக்குதான்
ராஜகுடும்பத்தைப் பொருத்தவரை, உயிருடன் இருந்தபோதும் சரி, மறைந்த பிறகும் சரி, மக்கள் மீது அதிக தாக்கத்தை உண்டுபண்ணும் பெண்கள் பட்டியலில் முதலிடம், மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்துக்குத்தான்.
மக்கள் மீது அதிக தாக்கத்தை உண்டுபண்ணும் ராஜ குடும்ப உறுப்பினர் யார் என்பதை அறிவதற்காக, Financial World என்னும் ஊடகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதிலும், கூகுள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அதிகம் தேடப்பட்ட, இடம்பெற்ற ராஜ குடும்பத்தினர் யார் என ஆராயப்பட்டது.
ஆய்வின் முடிவுகள், பிரித்தானிய மகாராணியார் ஒரு மாதத்தில் 4.7 மில்லியன் முறை கூகுளில் தேடப்பட்டதையும், இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேகுகளில் 1.6 மில்லியன் முறை இடம்பெற்றதையும், டிக்டாக்கில் 18.7 பில்லியன் முறை பார்வையிடப்பட்டதையும் தெரியப்படுத்தியுள்ளன.
சில ஆச்சரிய முடிவுகள்
ஆச்சரியமான விடயம் என்னெவென்றால், மற்றொரு ராஜ குடும்பப் பெண்ணும் மகாராணியாரை கிட்ட நெருங்கியதுதான். அவர், இளவரசி கேட்!
ஆம், மாதம் ஒன்றிற்கு 1.4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேகுகள், 2.9 மில்லியன் கூகுள் தேடல்கள் மற்றும் 6.3 பில்லியன் டிக்டாக் பார்வைகள் என பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார் கேட்.
அடுத்த ஆச்சரியம், அதிகம் கரித்துக் கொட்டப்படும் மேகன், கூகுளில் 4.5 மில்லியன் முறை தேடப்பட்ட ராஜ குடும்பப் பெண்ணாக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: GETTY
image – GE37RL