இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வரவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக வேகமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறையும் விலைகள்
மேலும், ஆக்ஸியோ, பிரீமியோ, ரைஸ், சிஎச்ஆர், வெசல், வேகன் ஆர், பாஸோ, விட்ஸ், கிரேஸ் போன்ற பல வகை கார்களின் விலைகள் குறைந்து வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.