புதுடில்லி: உக்ரைன்- ரஷ்யா போரால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடில்லியில் தேசிய ராணுவ கல்லூரியில் இன்று(நவ.,10) பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியவதாவது: சைபர் தாக்குதல் மற்றும் தகவல் சார்ந்த தாக்குதலானது பாதுகாப்பு உட்கட்டமைப்பில் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.
இந்த சைபர் தாக்குதல்களால் மின்சக்தி உற்பத்தி, போக்குவரத்து, பொது துறை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது, ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், எரிபொருள் நெருக்கடியையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் தடங்கலுக்கு வழிவகுத்ததால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எரிபொருள் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறால், அதிக விலை கொடுத்து எரிபொருளை இறக்குமதி விலை உயர்ந்தது. இதேபோன்று, தகவல் சார்ந்த தாக்குதலால், நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement