உலக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ள கத்தார் நாட்டுக்கு, மிதக்கும் ஹோட்டலான சொகுசு கப்பல் வந்தடைந்தது.
உலகக்கோப்பை போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, இந்த கப்பல் தோஹாவை இன்று வந்தடைந்தது.
உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல்களில் ஒன்றான MSC Europa கப்பலில் 22 தளங்கள் உள்ளன.
6,700-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த சொகுசு கப்பலில், ஒருநாள் இரவு தங்க, நபர் ஒருவருக்கு 347 அமெரிக்க டாலர்களும், உலகக்கோப்பை தொடர் முழுவதும் இரண்டு பேர் தங்க 85 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.