வியட்நாமில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்தோர்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
வியட்நாம் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
நடுக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்டு நவம்பர் 08-ஆம் திகதி வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட இலங்கை புலப்பெயர்ந்தோர்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்
2022-ஆம் ஆண்டு நவம்பர் 07-ஆம் திகதி பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற படகு குறித்த தகவல் கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சு இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளது.
அந்தப் படகை தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர், படகை இயக்கிய குழுவினர் அதில் இருந்த பயணிகளுடன் படகை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.
newsfirst.lk
சிங்கப்பூர் உதவியுடன் மீட்பு
பின்னர் வெளிவிவகார அமைச்சின் முயற்சியின் பேரில், இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் (MRCC) இணைந்து மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் எம்ஆர்சிசி மூலம் ஜப்பானியக் கொடியுடன் கூடிய Helios Leader என்ற கப்பலைத் தொடர்பு கொண்டு, கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அனைவரையும் மீட்டனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் தெற்கு வியட்நாமில் உள்ள Vung Tau துறைமுகத்தில் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
adaderana.lk
இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை
வியட்நாம் அதிகாரிகள் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் புலப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் புலம்பெயர்ந்தோரின் தகவல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் IOM ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி, மீட்கப்பட்டவர்களின் குடியுரிமை மற்றும் பிற சம்பிரதாயங்களைக் கண்டறிவதற்கான ஸ்கிரீனிங் செயல்முறை முடிந்தவுடன், கூடியவிரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.