நாட்டின் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க‌ இளைஞர்கள் முன் வர‌வேண்டும்: ஓம் பிர்லா

மாணவர்களுக்கு பட்டமளிப்பதற்கு முன்னதாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த வலுவான இந்தியாவை உருவாக்க ஊழல் இல்லாத இந்தியா உருவாக்க‌ இளைஞர்கள் பாடுபட வேண்டும். பிரதமர்‌ மோடி கொண்டு வரும் திட்டங்கள்‌ குறித்து இளைஞர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும், இளைஞர்கள் இதில் பங்கேற்று, நம் நாட்டின் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க‌ முன் வர‌வேண்டும் எனவும் கூறினார். 75 ஆம் ஆண்டு சுதந்திர தினதிற்கு பிறகு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். 

சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பருவநிலை மாற்றங்கள் எரிசக்தி பிரச்சனைகள் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இந்தியாவில் கல்வி ‌நிறுவனங்கள் சிறந்த கல்வியை ‌இன்றைய மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

இந்தியாவில் இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலகிலேயே சிறந்தவர்களாக உள்ளனர். இந்த 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. இந்த நூற்றாண்டின் சிறந்த நாடாக இந்தியா திகழும் என பேசினார். விழாவில் பல்கலைகழக வேந்தர் பாரிவேந்தர் எம்.பி.  இணை வேந்தர் சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் கல்லூரியில், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.