கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழுக்கூட்டம் நெடுச்சாலை வழியாக திருவனந்தபுரம் நோக்கி இன்று அதிகாலை நான்கு மணி அளவில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஷிப்ட் கார் ஒன்று , கட்டியாங்கோணம் என்னும் பகுதி அருகே வரும்போது அதிவேகத்தால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஷிப்ட் கார் எதிரே வந்த இன்னோவா கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு கார்களின் முன்பக்கமும் முழுவதுமாக நொறுங்கின.மேலும் இந்த விபத்தில் இரு வாகனங்களிலாக பயணித்த ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள் ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து கழுக்கூட்டம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த இரு கார்களும் நேருக்கு நேர் மோதும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் சாலை விபத்து குறித்து கூறுகையில், கொரொனா தொற்றுநோயை விட ஆபத்தானது என்று குறிப்பிட்டார். அதில் இருந்து இந்தியாவின் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். இந்தியயாவில் நடக்கும் விபத்துக்கள் குறித்த ஆய்வில், விபத்துக்களை தடுப்பதன் மூலம் , இந்தியாவில் ஆண்டுக்கு 20,554 உயிர்களை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் ஏற்படும் அதிக அளவிலான விபத்துக்களுக்கு இந்தியா அதிகமாக செலவு செய்து வருகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட்களை யன்படுத்தாமல் இருப்பது ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.