நாட்டின் மிகப் பெரிய மோசடியாகக் கருதப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அடுத்த அப்டேட் செய்தி வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக ரூ.13500 கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார். இந்த விஷயம் அம்பலாமானதும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து விஜய் மல்லையாவைப் போலவே இவரும் லண்டனுக்குத் தப்பிச் சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
2018ல் லண்டனுக்குத் தப்பிய இவரை இந்தியா அழைத்துவருவதற்கான முயற்சிகளை அமலாக்கத்துறையும் சிபிஐயும் எடுத்துவருகிறது. லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி பல முறை ஜாமின் கேட்டும் நீதிமன்றம் அனுமதி தரவில்லை.
இதற்கிடையில் நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சாம் கூஸ் பொருளாதார குற்றவாளி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீரவ் மோடி தரப்பு லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீரவ் மோடிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு கடத்தக் கூடாது எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெரிமி ஸ்டூவர்ட்-ஸ்மித் மற்றும் ராபர்ட் ஜே ஆகியோர் நேற்று அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மனநிலை பாதிப்பு கதையயெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.