மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை: போலீசார் உத்தரவு!

மும்பை: மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் இந்த தடை உத்தரவு இன்று மும்பை காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு நவம்பர் 13 முதல் டிசம்பர் 12 வரை அமலில் இருக்கும். இது குறித்து மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்படுள்ளதாவது, விவிஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் வகையில் பயங்கரவாதிகளும், தேச விரோத சக்திகளும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 30 நாட்களுக்கு பிரஹன்மும்பை போலீஸ் கமிஷனரேட் பகுதியின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய அல்லது மைக்ரோ-லைட் விமானம், பலூன்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.