மும்பை: கிரிப்டோகரன்சி சந்தையில் ஏற்பட்ட சரிவு பங்குச் சந்தையிலும் பிரதிபலித்ததால் சந்தை குறியீடு எண்கள் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 420 புள்ளிகள் சரிந்து 60,614 புள்ளிகளானது 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129 புள்ளிகள் சரிந்து 18,028 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.