ராணிப்பேட்டை: அரசு சார்பில் கட்டிய தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை காயம்

ராணிப்பேட்டை கலவை அருகே அரசு சார்பில் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது குழந்தை உட்பட 3 பேர் கடுக்காயங்களுடன் கலவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேல் சிகிச்சைக்காக அஜித் என்பவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அத்தியானம் கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதியில் கடந்த 2016 -17 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டில், நள்ளிரவு இரவு 2 மணி அளவில் விநாயகம் மகன் அஜித் (27), அஜித்தின் மனைவி செல்வி (25) மற்றும் இவர்களின் 4 வயதுடைய பெண் குழந்தை ஆகிய மூவரும் அவர்களது தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக் கொள்ளானது.
image
இந்த விபத்தில் இரண்டு பக்கம் சுவர் விடிந்து விழுந்துள்ளது, பின்னர் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த கலவை காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கீதா சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் படுகாயம் அடைந்த அஜித்தை மீட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
image
தரமற்ற முறையில் 20 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 7 பேருக்கு மட்டும் அரசு தரப்பில் தொகுப்பு வீடு கட்டி தரப்பட்டுள்ளது. கட்டித் தரப்பட்ட இந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.