மிரள் (தமிழ்)
இயக்குநர் எம்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘மிரள்’. பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இதில் முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகுகிறது.
பரோல் (தமிழ்)
இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகுகிறது. குடும்பப் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
யசோதா (தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி)
கே.ஹரி சங்கர், ஹரீஷ் நாராயண் ஆகியோர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘யசோதா’. தெலுங்கு மொழித் திரைப்படமான இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகுகிறது.
Nachindi Girl Friendu (தெலுங்கு)
தெலுங்கு இயக்குநர் குரு பவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கஜூலா உதய்சங்கர், ஜெனிபர் இம்மானுவேல் ஆகியோர் இதில் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
Black Panther: Wakanda Forever (ஆங்கிலம்)
‘Creed’, ‘Fruitvale Station’, ‘Black Panther’ போன்ற திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ரியான் கூக்லர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த படமான இது, ‘பிளாக் பேந்தர்’ நாயகன் சாட்விக் போஸ்மேனின் இறப்புக்குப் பிறகும் அதே மேஜிக்கை நிகழ்த்துமா என்பதே மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Mukundan Unni Associates (மலையாளம்)
அபினவ் சுந்தர் நாயக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசன், சுராஜ் வெஞ்சாரமூடு, சுதி கொப்பா, தன்வி ராம், ஜெகதீஸ், மணிகண்டன் பட்டாம்பி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகுகிறது.
Bermuda (மலையாளம்)
இயக்குநர் T. K. ராஜீவ் குமார் இயக்கத்தில் ஷேன் நிகம், வினய் ஃபோர்ட், சைஜு குருப் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ள மலையாளத் திரைப்படம் ‘Bermuda’. இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Jaya Jaya Jaya Jaya Hey (மலையாளம்)
இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ், அஜீஸ் நெடுமங்காடு ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Uunchai (இந்தி)
இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், அனுபம் கெர், போமன் இரானி, பரினீதி சோப்ரா ஆகியோர் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மொழித் திரைப்படமான இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்…
பூச்சாண்டி (Netflix – தமிழ்)
ஜே.கே. விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஹம்ஸ்னி பெருமாள், ஆர்ஜே ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், ரவி சங்கர், கணேசன் மனோகரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
Mukhbir – The Story of a Spy (ZEE5 -இந்தி)
பிரபல குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் நடிப்பில் சிவம் நாயர் மற்றும் ஜெய்பிரத் தேசாய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி மொழி ஸ்பை-திரில்லர் வெப்சீரிஸ் ‘Mukhbir’. இது நவம்பர் 11ம் தேதி (நாளை) ‘ZEE5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.
Monica, O My Darling (Netflix – இந்தி)
வாசன் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படமான இது நவம்பர் 11ம் தேதி (நாளை) ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. ராஜ்குமார் ராவ், ஹுமா குரேஷி, ராதிகா ஆப்தே, சிக்கந்தர் கெர், அகன்ஷா ரஞ்சன் கபூர், பகவதி பெருமாள் ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Rocket Gang (ZEE5 – இந்தி)
போஸ்கோ மார்டிஸ் இயக்கத்தில் ஆதித்யா சீல், நிகிதா தத்தா, ஜேசன் தாம், ரன்பீர் கபூர், மோக்ஷ்தா, ஜெயில்கனி, சஹாஜ் சிங், தேஜஸ் வர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘ZEE5’ ஓ.டி.டி தளத்தில் நவம்பர் 11ம் தேதி (நாளை) வெளியாகிறது.
Savings Account (ZEE5 – பெங்காலி)
இயக்குநர் ராஜா சந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள பெங்காலி மொழித் திரைப்படமான இது, நவம்பர் 11ம் தேதி (நாளை) ‘ZEE5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
Hot Seat (ஆங்கிலம் – Lionsgate play)
ஜேம்ஸ் கல்லன் ப்ரெசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘Hot Seat’. இத்திரைப்படம் ‘Lionsgate play’ ஓ.டி.டி தளத்தில் நவம்பர் 11ம் தேதி (நாளை) வெளியாகிறது. கெவின் தில்லன், மெல் கிப்சன், ஷானன் டோஹெர்டி ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Don’t Leave (Netflix-Turkish)
இயக்குநர் ‘Ozan Açiktan’ இயக்கத்தில் உருவாக்கியுள்ள துருக்கி மொழித் திரைப்படமான இப்படம் ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் நவம்பர் 11ம் தேதி (நாளை) வெளியாகிறது.
The Box (MUB-spanish)
இயக்குநர் ஜெர்மர் டெரோன் (Germar Derron) இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பானிஷ் மொழித் திரைப்படமான இது ‘MUBI’ ஓ.டி.டி தளத்தில் நவம்பர் 11ம் தேதி (நாளை) வெளியாகிறது.
இவை தவிர…
Rorschach (Hotstar – மலையாளம்)
நிசாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டி, ஷரபுதீன், ஜெகதீஷ், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், கோட்டயம் நசீர், சஞ்சு சிவராம் மற்றும் ஆசிப் ஆகியோர் நடித்து திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Hotstar’ ஓடிடி தளத்தில் நவம்பர் 11ம் தேதி (நாளை) வெளியாகிறது.
Mei Hoom Moosa (ZEE5 – மலையாளம்)
ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் திரையங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி (நாளை) ‘ZEE5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
சினம் (Netflix – தமிழ்)
இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் கடந்த நவம்பர் 10ம் தேதி (இன்று) ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.