கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, அமெரிக்காவின் 45வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகள் 2020 வரை அதிபராக இருந்த டிரம்ப், வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன டிரம்ப், கடந்த 2020ம் நடைபெற்ற தேர்தலில், தற்போதயை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தோற்றார்,
இந்தநிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 2024ஆம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக, அவரது உயர்மட்ட உதவியாளரும், நீண்ட கால ஆலோசகருமான ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, “முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக வருகிற செவ்வாயன்று (15ம் தேதி) அறிவிக்கப் போகிறார். மேலும் இது மிகவும் தொழில்முறையான, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக இருக்கும். நிச்சயமாக, நான் ஓடுகிறேன், நான் இதைச் செய்யப் போகிறேன், நான் வெளியேற்றப்பட்டிருக்கிறேன் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நாட்டை மீண்டும் ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற முதன்மையான பாதையில் கொண்டு வர வேண்டும்” என டிரம்ப் கூறியதாக மில்லர் தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொள்ளமாட்டார்; ரஷ்ய தூதரகம் அறிவிப்பு.!
மேலும் ஜனாதிபதி பதவியில் மற்றொரு அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கான தனது நோக்கம் குறித்து ‘எந்தக் கேள்வியும் தேவையில்லை’ என்று டிரம்ப் மீண்டும் கூறினார். வருகிற செவ்வாய்கிழமை புளோரிடாவில் உள்ள மாரா-ஏ-லாகோ தோட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், நூற்றுக்கணக்கான ஊடகத்தினரிடம் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று மில்லர் கூறினார். ஜேசன் மில்லர், கடந்த 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டிரம்பிற்காக பிரச்சாரம் செய்து பணிபுரிந்தார் என்பதும், அதிபர் பதவிக்குப் பிறகும் அவருக்கு ஆலோசகராகத் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.