சிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று (நவ.,12) காலை 8 மணிக்கு துவங்கியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜ., ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் தட்டிப் பறிக்குமா என்பது, அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.
55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று, தமது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜ., காங்., ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
ஜனநாயக கடமை ஆற்றுங்கள்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன், பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். வாக்காளர்கள் அனைவரும், வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement