மும்பை:சமூக வலைதளத்தில் மாறி மாறி ஆபாசமான கருத்துகள் பதிவிட்ட பிரபல பாலிவுட் நடிகையர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையரான ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டனர்.
நடிகை ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளதாக ஷெர்லின் சோப்ரா பகிரங்கமாக கூறியிருந்தார். அதேபோல் ஷெர்லின் குறித்து சில ‘வீடியோ’க்களை பதிவேற்றிய ராக்கி சாவந்த், அவரைப் பற்றி மிகத் தரக்குறைவாக பதிவிட்டார்.
இதையடுத்து, ‘பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்திய நடிகை ஷெர்லினை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என மும்பை போலீசில் ராக்கி சாவந்த் புகார் மனு கொடுத்தார். இதேபோல் ஷெர்லினும் புகார் மனு கொடுத்தார்.
இரு மனுக்களையும் பெற்ற மும்பை போலீசார், இருவர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement