ஷிம்லா:
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.
மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது. இது தவிர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்றவை 45 தொகுயில் நிற்கின்றன. சுயேட்சைகள் 99 பேர் போட்டியிடுகிறார்கள். 412 வேட்பாளர்களில் 24 பேர் பெண்கள் ஆவார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.