இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்தலில், ஏராளமானோர் வாக்களித்தனர். மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 7 ஆயிரத்து 881 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. சம்பா மாவட்டத்தை சேர்ந்த நரோ தேவி என்ற 105 வயது மூதாட்டி நேரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தேர்தலில் 65 புள்ளி 92 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவு முடிந்த பின், சம்பா மாவட்டத்தில் பனி படர்ந்த மலைப்பகுதியில் நடந்தே 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேர்தல் பணியாளர்கள் பெட்டிகளை எடுத்துச் சென்றனர்.